‘பிரேக்கிங் நீயூஸி’ல் இடம் பிடித்த ஜெய்!

ஜெய், அறிமுகம் பானு நடிக்கும் படம் ‘BREAKING NEWS’

செய்திகள் 21-Feb-2019 2:10 PM IST VRC கருத்துக்கள்

ஜெய் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் ‘நீயா-2’, ‘பார்ட்டி’, மற்றும் ‘கருப்பர் நகரம்’. இந்த படங்களை தொடர்ந்து ‘BREAKING NEWS’ என்ற படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார் ஜெய். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கும் இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடந்தது. இந்த படத்தில் கதையின் நாயகியாக கன்னட படங்களில் நடித்து பிரபலமான பானு நடிக்கிறார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும்! இவர்களுடன் தேவ்கில், ‘வேதாளம்’ படத்தில் வில்லனாக நடித்த ராகுல்தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகர், பழ கருப்பையா, ராதாரவி, ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு விஷால் பீட்டர் இசை அமைக்கிறர். ஜானி லால் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கத்தை மகேஷ் கவனிக்கிறார். சண்டை காட்சிகளை ‘ஸ்டன்னர்’ சாம் அமைக்கிறார். ‘ராகுல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் கே.திருக்கடல் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

#Jai #Neeya2 #BhanuThachi #PTSelvakumar #breakingnews

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;