மாதவன், அனுஷ்கா, அஞ்சலி இணையும் படம்!

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி இணைந்து நடிக்க தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் உருவாகும் படம்!சுந்தர்.சி.இயக்கத்தில் ‘ரெண்டு’ என்ற படத்தில் இணைந்து நடித்த மாதவனும், அனுஷ்காவும் 13 ஆண்டுகளுக்கு பிறகு  மீண்டும

செய்திகள் 21-Feb-2019 12:06 PM IST VRC கருத்துக்கள்

சுந்தர்.சி.இயக்கத்தில் ‘ரெண்டு’ என்ற படத்தில் இணைந்து நடித்த மாதவனும், அனுஷ்காவும் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்றும் இந்த படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் இயக்க இருக்கிறார் என்றும் செய்தியை கடந்த நவம்பர் மாதம் 2-ஆம் தேதி வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படம் குறித்த மேலும் பல புதிய தகவல்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் கதையை கோனா வெங்கட், கோபி மோகன் இருவரும் எழுத ஹேமந்த் மதுகர் இயக்குகிறார்.

இந்த படம் ஒரு சைலண்ட் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது என்றும் இந்த படத்தில் மாதவன், அனுஷ்காவுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ள படக்குழுவினர், இப்படம் ATMOS ஒலி அமைப்பில் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து உருவாக்கப்பட இருக்கிறது என்றும் இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இசை அமைக்க இருக்கிறார் என்றும் தகவலையும் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த படத்திற்கு ஹாலிவுட் பிரபலம் பாப் பிரவுட்ன் சண்டை காட்சிகளை அமைக்க, ஷானியேல் டியோ ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். காஸ்மோஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ், கிரண் ஸ்டுடியோஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு வெளியாக இருக்கிறது என்றும் அறிவித்துள்ளனர். மாதவன் இப்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பற்றிய படமாக உருவாகும் ‘Rocketry: The Nambi Effect’ என்ற படத்தை இயக்கி அதில் நம்பி நாராயணாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maddy #Madhavan #Rocketry #TheNambiEffect #ISRO #Anushkashetty #Anjali

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கழுகு 2 - டீஸர்


;