ஓவியா படத்தின் புதிய ரிலீஸ் தேதி!

ஓவியா நடிக்கும் ‘90ML’ மார்ச் 1-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 19-Feb-2019 3:58 PM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘90ML’. ‘குளிர்’ படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கியுள்ள இந்த படத்தில் ஓவியாவுடன் ஆன்சன் பால், நிதின் சத்யா, விஜய் வசந்த்ம் விக்னேஷ் சிவன், அரவிந்த் ஆகாஷ், யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிம்பு இசை அமைத்திருக்க, அவர் ஒரு கேமியோ கேரக்டரிலும் நடித்துள்ளார். இந்த பாத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. சென்சாரில் ‘A’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ள இந்த படத்தை முதலில் இம்மாதம் 22-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருந்தார்கள். ஆனால் இப்போது திடீரென்று இப்படத்தின் ரிலீஸை தள்ளி வைத்த படக்குழுவினர் ‘90ML’ மார்ச் 1-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு சட்டை ஒரு பல்பம்


;