ஆரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஷ்ணு விஷால்!

ஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை போஸ்டரை நடிகர் விஷ்ணுவிஷால் வெளியிட்டார்!

செய்திகள் 16-Feb-2019 11:47 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்தவர் மறைந்த இப்ராகிம் ராவுத்தர்! இவரது நிறுவனமான 'ராவுத்தர் மூவிஸ்'. நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'நெடுஞ்சாலை' புகழ் ஆரி நடிப்பில் உருவாகி வரும் "எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்" என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் 'நான் கடவுள்' ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணிபுரிகிறார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் நேற்று இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார். இப்படத்தினை இப்ராஹிம் ராவுத்தரின் மகனான முஹம்மது அபுபுக்கர் தயாரித்து வருகிறார்.

#VishnuVishal #Aari #EllamMelaIrukuruvanPaathuppan #EMIP #AishwaryaDutta #Aleka #ShaashviBala

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிலுக்குவார்பட்டி சிங்கம் டைலர்


;