மீண்டும் இணையும் சிம்ரன், த்ரிஷா!

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் படத்தில் இணைந்து நடிக்கும் சிம்ரன், த்ரிஷா!

செய்திகள் 14-Feb-2019 11:15 AM IST VRC கருத்துக்கள்

1999-ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சில காட்சிகளில் நடித்திருந்தார் த்ரிஷா. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் சிம்ரனும், த்ரிஷாவும் நடித்திருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் இருவருக்குமான காம்பினேஷன் காட்சிகள் இல்லை! இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘சதுரம்-2’ படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இந்த படம் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் படமாக உருவாக இருக்கிறது. அத்துடன் இந்த படத்தின் படபிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரம் துவங்க இருக்கிறது என்றும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைக்க, ஒளிப்பதிவை சரவணன் ராமசாமி கவனிக்க, படத்தொகுப்பை சான் லோகேஷ் செய்ய இருக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இப்போது ஜீவா, ஷாலினி பாண்டே நடிக்க ‘கொரில்லா’ என்ற படத்தை தயாரித்து வரும் ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை கொடைக்கானல், பிச்சாவரம் மற்றும் கேரளாவில் நடைபெறவிருக்கிறது.

#Trisha #Simran #96 #Petta #SumanthRadhakrishnan #Sadhuram2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;