காமெடி படத்தில் ஜோதிகா!

‘குலேப காவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் காமெடி படம்!

செய்திகள் 11-Feb-2019 10:55 AM IST VRC கருத்துக்கள்

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிக்க, சூர்யாவின் ‘2D ENTERTAINEMT’ நிறுவனமும் இயக்குனர் பிரம்மாவின் ‘கிரிஸ் பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்த படம் ‘மகளிர் மட்டும்’. இந்த படத்தை தொடர்ந்து 2D ENTERTAINEMT நிறுவனம் தயாரிக்க, ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா கலந்துகொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். 36 வதினிலே, மகளிர்மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்களை தொடர்ந்து ஜோதிகா அறிமுக இயக்குனர் ராஜ் இயக்த்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் இந்த படமும் கதாநாயகியை மையப்படுத்திய கதையாம்! இந்த படத்தை ’குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார். காமெடி படமாக உருவாகும் இந்த படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூரலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை வீரசமர் கவனிக்க, படத்தொகுப்பை விஜய் கவனிக்கிறார்.

#Jyothika #Suriya #kaatrinmozhi #2DEntertainment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;