கடந்த வாரம் ஐந்து, இந்த வாரம் ஆறு!

இந்த வாரம் தில்லுக்கு துட்டு-2, நேத்ரா, பொதுநலன் கருதி, அவதார வேட்டை,  வாண்டு, உறங்காப்புலி ஆகிய 6 திரைப்படங்கள் வெளியாகின்றன!

செய்திகள் 8-Feb-2019 4:45 PM IST VRC கருத்துக்கள்

கடந்த வாரம் ‘சர்வம தாளமயம்’, ‘பேரன்பு’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ ‘சகா’, ‘பேய் எல்லாம் பாவம்’ ஆகிய 5 நேரடி தமிழ் படங்கள் வெளியாகின! அந்த வரிசையில் இந்த வாரம் எத்தனை நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறித்த விவரம் வருமாறு…

1. தில்லுக்கு துட்டு-2

இயக்குனர் ராம்பாலாவும், சந்தானமும் முதன் முதலாக இணைந்த ‘தில்லுக்கு துட்டு’ துட்டு சேர்த்த படமாக அமைய, அதே கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘திலுக்கு துட்டு-2’. இந்த படத்தை நடிகர் சந்தானமே தயாரிக்க, இப்படத்தில் சந்தானத்துடன் அறிமுக்ம் ஷ்ரித்தா ஷிவதாஸ் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ளனர். பேய் மற்றும் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் நேற்று வெளியாக, இந்த ‘தில்லுக்கு துட்டு-2’வுக்கும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது!

2.நேத்ரா

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வினய், தமன் குமார், சுபிக்ஷா, ரித்விகா, ஜி.கே.ரெட்டி, மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்வேதா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜனின் ‘ஸ்டார் மூவீஸ்’ நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்டுள்ளது. த்ரில்லர் ரக படமாக உருவாகியுள்ள ‘நேத்ரா’வுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். ஏ.ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

3. பொதுநலன் கருதி

அறிமுக இயக்குனர் சியோன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், அதித் அருண், கருணாகரன், யோக் ஜேபி, சுபிக்‌ஷா, லீஷா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படத்தை அன்பு வேல்ராஜன் தயாரித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஹரி கணேஷ் இசை அமைத்துள்ளார். சுவாமிநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

4.அவதார வேட்டை

அறிமுக இயக்குனர் ஸ்டார் குஞ்சுமோன் இயக்கத்தில் வி.ஆர்.விநாயக், ராதாரவி, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், சோனா, ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள படம் ‘அவதார வேட்டை’. காதல் ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு மைக்கேல் இசை அமைத்துள்ளார். காசி விஸ்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். கேசவன் சாரி படத்தொகுப்பு செய்துள்ளார்.

5.வாண்டு

அறிமுகங்கள் சின்னு, எஸ்.ஆர்.குணா, ஷிகா, ஆல்வின் மற்றும் சாய் தீனா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் வாசன் ஷாஜி எழுதி, இயக்கி உள்ளார். காலதும் வீரமும் கலந்த கதையாம் ‘வாண்டு’. எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.நேசன் இசை அமைத்துள்ளார். ரமேஷ் வி.மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

6.உறங்காப்புலி

‘மெரினா புரட்சி’ என்ற படத்தை இயக்கிய எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘உறங்காப்புலி’. ‘உலகின் முதல் அணையை கட்டியவன் தமிழன்! ஆனால் இன்று…?’ என்ற டேக் லைனுடன் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுகம் நவீன் கதாநாயகனாக நடிக்க இவருடன் மற்றும் சில அறிமுக நடிகர்கள் நடித்துள்ளனர். சி.ஜே.பிக்சர்ஸ், நாச்சியால் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அல் ரூஃபியான் இசை அமைத்துள்ளார். கே.கே.ஒளிப்பதிவு செய்துள்ளார். அலெக்ஸ் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட 6 படங்கள் இந்த வாரம் ரிலீசாகிறது. இந்த படங்களில் எந்தெந்த படங்கள் ரசிகர்களின் ஆதரவு பெற்று வெற்றிப் படங்களாக அமையும் என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்!

#Nethraa #DhillukuDhuddu2 #PothuNalanKaruthi #Vaandoo #AvatharaVettai #Urangapuli

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு 2 டீஸர்


;