‘ஒரு உணவு வேளையில் முடிவான கதை தேவ்’ – இயக்குனர் ரஜத் ரவிசங்கர்

‘தேவ்’ படத்திற்காக கார்த்தி கடுமையாக உழைத்திருக்கிறார்! – இயக்குனர் ரஜத் ரவிசங்கர்

செய்திகள் 5-Feb-2019 11:38 AM IST Top 10 கருத்துக்கள்

‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் லக்‌ஷமண் தயாரித்துள்ள படம் ‘தேவ்’ கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கும் இந்த படத்தி பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த படத்தை இயக்கியிருக்கும் ரஜத் ரவிசங்கர் பேசியதன விவரம் வருமாறு…‘‘கிட்டத்தட்ட 10 வருடக்கால போராட்டத்திற்கு பிறகு எனக்கு இயக்கக் கிடைத்த வாய்ப்பு இந்த ‘தேவ்’. இந்த கதை தான் என்னுடைய முதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு இரவு உணவு வேளையில் தயாரிப்பாளர் லக்‌ஷ்மணுடன் பேசிக்கொண்டிருக்கும் போது முடிவான கதை இது. இப்படம் எடுத்து முடிக்க குறைவான நேரம் தான் ஒதுக்கினோம். ஆனால் அதற்குள் படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து உபகாரணங்களையும் தயாரிப்பு நிர்வாகம் சிறப்பாக செய்து கொடுத்தார்கள். கார்த்திக் அண்ணாவின் முதல் படத்திலிருந்தே நான் அவருடைய ரசிகன். இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். மேலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.ரகுல் ப்ரீத் சிங்கை பொறுத்தவரை வந்தோம், நடித்தோம், சென்றோம் என்ற பழக்கம் அவரிடம் இருக்காது. அவரது நடிப்பில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவது போல் தான் இருக்கும். இந்த படத்தில் அவருடைய முழு திறமையையும் காட்டியிருக்கிறார். இந்த படத்தில் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், படத்தொகுப்பாளர் ரூபன் என்று பெரிய பெரிய தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி! என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை இயக்க வாய்ப்பு தந்த லக்‌ஷமண் சார், என்னை நம்பி இதில் நடிக்க ஒப்புகொண்ட கார்த்தி அண்ணா ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்!

தேவ் படத்தில் கார்த்தி ரகுல்ப்ரீத் சிங்குடன் பிரகாஷ் ராஜ், ரம்யாகிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா ஆகியோரும் நடித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்


;