இந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்?

இந்த வாரம் சர்வம் தாளமயம், பேரன்பு, வந்தா ராஜாவாதான் வருவேன், சகா, பேய் எல்லாம் பாவம் ஆகிய 5 நேரடி தமிழ் படங்கள் வெளியாகின்றன!

செய்திகள் 31-Jan-2019 5:10 PM IST Top 10 கருத்துக்கள்

கடந்த வாரம் ‘சார்லி சாப்ளின்-2’, ‘குத்தூசி’, ‘சிம்பா’ ஹிந்தி டப்பிங் படமான ‘மணிகர்னிகா’ ஆகிய 4 திரைப்படங்கள் வெளியாகின. அந்த வரிசையில் இந்த வாரம் எத்தனை தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் களத்தில் குதித்திருக்கின்றன என்பதை பார்ப்போம்!

1.சர்வம் தாளமயம்

‘மின்சாரக்கனவு’, ‘கண்டு கொண்டேன் கணடு கொண்டேன்’ ஆகிய படங்களை இயக்கியவரும், பிரபல ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் 18 வருடங்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வினீத் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம், உறவினர்களான ஏ.ஆர்.ரஹ்மானும், ஜி.வி.பிரகாஷும் இணைந்துள்ள படம் என பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள ‘சர்வம் தாளமயம்’ அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் படமாக அமையும் என்றே ஏதிர்பார்க்கப்படுகிறது.

2.பேரன்பு

‘கற்றது தமிழ்’, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’ ஆகிய படங்களை தொடர்ந்து ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மம்முட்டி, அஞ்சலி, ‘தங்கமீன்கள்’ சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களும், விருதுகளும் அள்ளிய ‘பேரன்பு’ மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்களின் பார்வைக்காக இந்த படம் நாளை உலகம் முழுக்க வெளியாகிறது. மம்முட்டி 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடித்து வெளியாகும் படம் இது என்பதோடு இசைக்கு யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவுக்கு தேனி ஈஸ்வர் என்று பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் கை கோர்த்துள்ள ‘பேரன்பு’க்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

3.வந்தா ராஜாவாதான் வருவேன்

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ATTARINTIKI DAREDI’ படத்தை ‘வந்தா ராஜாவாதான்’ என்ற பெயரில் சுந்தர்.சி. ரீ-மேக் செய்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிம்பு, கேத்ரின் தெரெசா, மேகா ஆகாஷ், யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சுந்தர்.சி.யும் சிம்புவும் முதன் முதலாக கை கோர்த்துள்ள படம், ‘கலகலப்பு-2’வுக்கு பிறகு சுந்தர்.சி.இயக்கியுள்ள படம், ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியாகும் படம் என்று பல சிறப்புக்கள் உள்ள இந்த படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்து வரும் படமாகும். ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைத்துள்ல இந்த படம் ரஜினியின் ‘2.0’ படத்தை தொடர்ந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக வெளியாகும் படமாகும்!

4.சகா

அறிமுக இயக்குனர் முருகேஷ் இயக்கத்தில் சரண், பிரித்வி, கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, ஆய்ரா, நீரஜா ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் ‘நட்பு’ என்ற விஷயத்தை மையப்படுத்திய கதையாகும். ‘ செல்லி சினிமாஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சபீர் இசை அமைத்துள்ளார். நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

5. பேய் எல்லம் பாவம்

ஒரு சில மலையாள இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தவரும், சில விளம்பர படங்களை இயக்கியவருமான தீபக் நாராயணன் இயக்கியுள்ள இந்த படத்தில் புதுமுகங்கள் அரசு கதாநாயகனாக நடிக்க, கேரளாவை சேர்ந்த டோனா சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார் இவர்களுடன் அப்புக்குட்டி, ஸ்ரீஜித் ரவி, தர்ஷன் சிவக்குமார், ரசூல் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். காமெடி த்ரில்லர் ரக படமாக உருவாகியுள்ள ‘பேய் எல்லாம் பாவம்’ படத்திற்கு நவீன் சங்கர் இசை அமைத்துள்ளார். இந்த படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வருமாறு - இந்த படத்தை இயக்கியிருக்கும் தீபக் நாராயணனுக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் டோனா சங்கருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேளையில் காதல் மலர்ந்து இருவரும் வாழ்க்கையிலும் இணைந்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட 5 நேரடி தமிழ் திரைப்படங்கள் நாளை (ஃபிப்ரவரி 1-ஆம் தேதி) வெளியாகிறது! இந்த படங்களில் எந்தெந்த படங்களுக்கு ரசிகரகளின் வரவேற்பு கிடைக்கும் என்பது இப்படங்களின் வெளியீட்டுக்கு பிறகு தெரிந்து விடும்!

#Peranbu #VanthaRajavathaanVaruven #SarvamThaalamayam #Sagaa #PeiEllamPavam #STR #GVP

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வந்தா ராஜாவாதான் வருவேன் - ட்ரைலர்


;