இசை கலைஞராக நடிக்கும் விஜய்சேதுபதி!

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உதவியாளர் வெங்கட் கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்த்ல் விஜய்சேதுபதி நடிக்கும் படம்!

செய்திகள் 18-Jan-2019 11:44 AM IST Top 10 கருத்துக்கள்

ஏராளமான படங்களை கையில் வைத்துகொண்டு படு பிசியாக நடித்து வருபவர் விஜய்சேதுபதி! நேற்று முன் தினம் விஜய் சேதுபதி நடிக்க, ‘சிந்துபாத்’ என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது என்ற தகவலை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் மற்றொரு பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘சந்திரா ஆர்ட்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் இசக்கி துரை தயாரிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுடன் ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெங்கட் கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறர். இந்த படத்தில் விஜய்சேத்பதி இசை கலைஞராக நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்திற்காக 150 வருடம் பழமை வாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் உருவாக்கப்பட இருக்கிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படம் விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருட் செல்வில் உருவாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ள படக்குழுவினர், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேச அளவில் நடைபெறும் பிரச்சனைகளை பற்றியும் பேசும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்க இருக்கிறது. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். அவர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிராது. இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்க இருக்கிரார். ஒளிப்பதிவை மகேஷ் முத்துசாமி கவனிக்க இருக்கிறார். கலை இயக்கத்தை ஜான் பிரிட்டோ கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மூணாறு, கொடைக்கானல்,ஊட்டி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்க இருக்கிறது.

#VijaySethupathi #MakkalSelvan #ChandaraaArts #EssakiDurai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;