துல்கர் சல்மான் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர் மகள்!

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில்  இயக்குனர் அகத்தியன் மகள் நிரஞ்சனி!

செய்திகள் 14-Jan-2019 5:01 PM IST Top 10 கருத்துக்கள்

தேசிங்கு பெரிய சாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்த படத்தில் VJ ரக்‌ஷன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்ற தகவலை சென்ற 9-ஆம் தேதி வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தில் இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகள் நிரஞ்சனியும் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர் அகத்தியனின் முத்த மகள் கிருத்திகா. இவர் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். இரண்டாவது மகள் விஜயலட்சுமி. இவர், ‘சென்னை-600028’, ‘அஞ்சாதே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மூன்றாவது மகள் நிரஞ்சனி. இவர் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஒரு மூக்கிய கேரக்டரை ஏற்று நடிக்கிறார். இது குறித்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பாக வெளியிட்டுள்ளனர்
#DQ #KannumKannumKollaiyadithaal # RituVarma #GauthamVasudevMenon #VJRakshan
#DulquerSalman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்னை நோக்கி பாயும் தொட்டே ட்ரைலர்


;