பாபி சிம்ஹா பட தலைப்பு மாற்றம்!

பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன் நடிக்கும் படத்தின் தலைப்பு ‘அக்னி VS தேவி’ என்று மாற்றப்பட்டுள்ளது!

செய்திகள் 14-Jan-2019 3:15 PM IST Top 10 கருத்துக்கள்

பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா, சதீஷ் ஆகியோர் நடிப்பில் ‘அக்னிதேவ்’ என்ற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது. ‘சென்னையில் ஒரு நாள்’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளனர். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் இப்போது நடந்து வரும் நிலையில் இபடத்தின் பெயரை ‘அக்னி VS தேவி’ என்று படக்குழுவினர் மாற்றியுள்ளனர். இந்த டைட்டில் மாற்றத்துகான காரணம் குறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது. ‘இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது! படத்தை பார்க்கும்போது உங்களுக்கு டைட்டில் மாற்றத்துக்கான காரணம் தெரிய வரும்’’ என்றனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்க, ஜனா ஒளிப்பதிவு வேலைகளை கவனித்துள்ளார்..

#BobbySimha #AgniDev #RajeshKumar #Madhoo #RamyaNambeesan #Sathish

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாமி 2 ட்ரைலர்


;