ரிலீஸ் தேதி குறித்த ‘பேரன்பு’

ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா நடிக்கும் ‘பேரன்பு’ ஃபிப்ரவரி 1-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 14-Jan-2019 2:47 PM IST Top 10 கருத்துக்கள்

ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, குழந்தை நட்சத்திரம் சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கும் படம் ‘பேரன்பு’. ‘ஸ்ரீராஜலட்சுமி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் பி;எல்.தேனப்பன் தயாரித்துள்ள இந்த படம் பல சர்வதேசத்திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றுள்ளது. ஒரு மாற்றுத்திறனாளி மகளை வளர்க்கும் ஒரு தந்தையின் போராட்டங்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸருக்கும், டிரைலருக்கும் ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு மற்றும் இப்படத்திற்கு திரைப்பட விழாக்களில் கிடைத்த வரவேற்பு முதலான விஷயங்களால் ‘பேரன்பு’ மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையீல் இப்படம் எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வரும் ரசிகர்களுக்கு, ‘பேரன்பு’ ஃபிப்ரவரி 1-ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

#peranbu #Mammootty #YuvanShankarRaja #Anjali #Ameer #Samuthirakani #Vadivukkarasi
#ThangaMeengal #Sadhana

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் டீஸர்


;