‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ - எந்தப் படம் உலகப் புகழ்பெற்ற கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் திரையிடப்படுகிறது?

பாரிசிலுள்ள கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின்  ‘விஸ்வாசம்’ ஆகிய 2 படங்களும் திரையிடப்படுகிறது!

செய்திகள் 7-Jan-2019 2:18 PM IST Top 10 கருத்துக்கள்

சமீபகாலமாக தமிழில் வெளியாகும் பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் பாரீசிலுள்ள் உலகப் புகழ் பெற்ற ‘கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கில் திரையிடப்படுவது வழக்கமாகி வருகிறது. ரஜினியின் ‘கபாலி’, அதனை தொடர்ந்து வெளியான ‘காலா’, விஜய்யின் ‘மெர்சல்’, ‘சர்கார்’, சமீபத்தில் வெளியான ரஜினியின் ‘2.0’ முதலான திரைப்படங்கள் இந்த ‘கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த திரையரங்கில் ஒரு திரைப்படம் திரையிடப்படுவது என்பது மிகப் பெரிய கௌரவமாக நினைக்கும் நிலையில் இந்த பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் எந்த திரைப்படம் வெளியிடப்படும் என்பது ரசிகர்களின் மத்தியில் மிகப் பெரிய கேள்வியாக இருந்து வந்தது. இந்நிலையில் வருகிற 10-ஆம் தேதி இந்த திரையரங்கில் ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் திரையிடப்பட இருப்பதை ‘கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரஜினி ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பது நிச்சயம்!

#Petta #Viswasam #Ajith #Rajini #Siva #Aniruth #grandRex

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;