ராம், மம்முட்டியின் ‘பேரன்பு’ - முக்கிய தகவல்!

ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா நடிக்கும் ‘பேரன்பு’ ஃபிப்ரவரியில் வெளியாகிறது!

செய்திகள் 3-Jan-2019 3:07 PM IST Top 10 கருத்துக்கள்

‘தரமணி’ படத்தை தொடர்ந்து ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேரன்பு’. பி.எல்.தேனப்பனின் ‘ஸ்ரீராஜலட்சுமி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் மம்முட்டி, அஞ்சலி, ‘தங்க மீன்கள்’ சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஒரு மாற்றுத்திறனாளி மகளை வளர்க்கும் ஒரு தந்தையின் போராட்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகள் மற்றும் பாராட்டுக்களை அள்ளி வந்துள்ளது.

இதனால் ‘பேரன்பு’ படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட, இந்த படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தகவலை இயக்குனர் ராம் பகிர்ந்துள்ளார்! அதில், ‘பேரன்பு’ படத்தின் தமிழக விநியோக உரிமையை ‘LIGHT WEIGHT’ என்ற நிறுவனம் வாங்கியுள்ளது என்றும் ‘பேரன்பு’ ஃபிப்ரவரி மாதம் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ’பேரன்பு’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#Mammootty #Anjali #Sadhana #Samuthrakani #Ameer #YuvanShankarRaja #DirectorRam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;