2018-ல் எத்தனை படங்கள் ரிலீசானது?

2017-ல் 197 தமிழ் திரைப்படங்கள் வெளியான நிலையில் 2018-ல் 181 திரைப்படங்களே வெளியானது!

செய்திகள் 3-Jan-2019 2:18 PM IST Top 10 கருத்துக்கள்

நேற்று முன் தினம சென்ற ஆண்டு (2018) வெளியான படங்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை பெற்ற படங்கள் குறித்த ஒரு கண்ணோட்டத்தை வெளியிட்டிருந்தோம். அதில் கடந்த ஆண்டு 181 நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியாகின என்று குறிப்பிட்டிருந்தோம். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை (2017) விட கொஞ்சம் குறைவுதான்! 2017-ல் 197 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் 2018-ல் 181 படங்களே வெளியானது. இந்த எண்ணிக்கை குறைவுக்கான காரணம், தமிழ் சினிமா உலகில் கடந்த ஆண்டு தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்ற வேலை நிறுத்தமாகும்! இந்த வேலைநிறுத்த நாட்களில் எந்த ஒரு புதிய திரைப்படமும் வெளியாகவில்லை. இது ஒரு காரணமாக கூறப்பட்டாலும் பட எண்ணிக்கை குறைய மற்று சில காரணங்களும் உண்டு!

அதாவது, அனைத்து பட வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் அப்படங்களை வெளியிட போதுமான தியேட்டர்கள் கிடைக்காததும் வேறு ஒரு காரணமாக கூறப்படுகிறது. பெரிய நட்சத்திர அந்தஸ்து உள்ள படங்கள் என்றால் அந்த படங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்கள் கிடைப்பது சுலபம்! ஆனால் அதிகம் அறிமுகம் இல்லாத நடிகர், நடிகைகள் நடித்த படங்கள், சிறு முதலீட்டு படங்களுக்கு அவ்வளவு எளிதில் விநியோகஸ்தர்களோ, தியேட்டர்களோ கிடைப்பதில்லை.! அதுவும் இல்லாமல் ஒவ்வொரு வாரமும் நான்கு, ஐந்து என்ற எண்ணிக்கையில் திரைப்படங்கள் வெளியாவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. சில தயாரிப்பாளர்கள் தங்களது படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் போகும்போது அப்படங்களின் ரிலீஸை தள்ளி வைப்பதும் இந்த எண்ணிக்கை குறைவுக்கு காரணமாக அமைகிறது! இந்த வகையில் ஏராளமான திரைப்படங்கள் விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர்கள் கிடைக்காமல் ரிலீசாகாமல் இருக்கின்றன என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும். இந்த பிரச்சனை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#movies2018 #181moviereleases #kadaikuttysingam #96 #Ratchasan #VadaChennai #Nota

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்


;