சித்தார்த்தின் புத்தாண்டு ட்ரீட்!

சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேத்ரின் தெரெசா நடிக்கும் படம் ‘அருவம்’

செய்திகள் 2-Jan-2019 12:06 PM IST VRC கருத்துக்கள்

‘வெற்றிவேல்’, ‘சிவலிங்கா’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் சேகர் இயக்கத்தில் ஒரு படம் உருவாகிறது என்றும் இந்த படத்தில் சித்தார்த், கேத்ரின் தெரெசா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள் என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி சென்னையில் நடந்து. அதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு ‘அருவம்’ என்று டைட்டில் சூட்டப்பட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

வித்தியாசமான கதைகளை, கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் சித்தார்த் இப்படத்திலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்பது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிப்படுத்துகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் மூலம் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட் வழங்கிய சித்தார்த் நடிக்கும் இப்பபடத்தில் சதீஷ், காளிவெங்கட், மதுசூதன் ராவ், ‘வேதாளம்’, ‘றெக்க’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த கபிர் துஹான் சிங் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவுக்கு ஏகாம்பரம், இசைக்கு எஸ்.எஸ்.தமன், படத்தொகுப்பு தினேஷ் பொன்ராஜ் என பெரும் கூட்டணி அமைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் முடிவடையும் என்பதையும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;