‘பேட்ட’யின் சாதனையை 9 மணிநேரத்தில் முறியடித்த ‘விஸ்வாசம்’

ரஜினியின் ‘பேட்ட’ டிரைலர் 24 மணிநேரத்தில் படைத்த சாதனையை அஜித்தின் ‘விஸ்வாசம்’ 9 மணிநேரத்தில் முறியடித்தது!

செய்திகள் 31-Dec-2018 12:19 PM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘பேட்ட’யின் டிரைலர் கடந்த 28-ஆம் தேதி வெளியானது. ரஜினியின் ஸ்டைலிஷான தோற்றத்துடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுத்தீன் சித்திக், சிம்ரன், சசிக்குமார், மேகா ஆகாஷ் என்று படத்தில் நடிக்கும் பெரும்பாலான நட்சத்திரங்களும் இடம்பெற்ற இந்த டிரைலர் ரஜினி ரசிகர்களை மட்டும் அல்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது. ‘பேட்ட’ டிரைலர் வெளியான 24 மணிநேரத்தில் 11 மில்லியன் (1 கோடி 10 லட்சம்) பார்வையாளர்களுக்கும் மேல் பார்க்கப்பட்டு டிரெண்டிங் ஆனது! ரஜினி இதுவரை நடித்து வெளியான படங்களில் இது மிகப் பெரிய சாதனையாகும்.

இந்நிலையில் பொங்கலுக்கு ரஜினியின் ‘பேட்ட’ படத்துடன் ரிலீசாகவிருக்கும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலர் நேற்று 1.30 மணிக்கு வெளியானது. அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, யோகி பாபு ஆகியோர் இடம் பெற்றுள்ள இந்த டிரைலர், ‘வாழ்க்கையில ஒரு தடவை அழாத பணக்காரனும் இல்லை, ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்லை’, ‘என் கதையில நான் வில்லன்டா…’ போன்ற சில பஞ்ச் வசனங்களுடன் வெளியாக, இந்த டிரைலர் அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களையும் கவரும் விதமாக அமைந்திருந்தது. அதே நேரம் அஜித்தின் ‘விஸ்வாசம்’ டிரைலரில் இடம் பெற்ற சில வசனங்கள் ரஜினியின் ‘பேட்ட’ டிரைலரில் இடம் பெற்ற சில வசங்னங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் அமைந்திருந்ததால் இது அஜித் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியது! இந்நிலையில் நேற்று 1.30 மணிக்கு வெளியான ‘விஸ்வாசம்’ டிரைலர் 9 மணிநேரத்திலேயே ரஜினியின் ‘பேட்ட’ டிரைலரின் சாதனையை முறியடித்தது. அதாவது, ரஜினியின் ‘பேட்ட’ 24 மணிநேரத்தில் 11 மில்லியன் ரசிகரகளின் பார்வையிடுதலை பெற்ற நிலையில் அஜித்தின் விஸ்வாசம் 9 மணி நேரத்திலேயே 11 மில்லியன் ரசிகர்களின் பார்வையிடுதலை பெற்று ரஜினியின் ‘பேட்ட’யின் சாதனையை முறியடித்தது! இது அஜித் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அஜித்தின் ‘விஸ்வாசம்’ டிரைலருக்கு கிடைத்த இந்த வரவேற்பு தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;