ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை வழங்கிய ‘கடாரம் கொண்டான்’

விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ செகண்ட லுக் மற்றும் டீஸர் குறித்த தகவல்!

செய்திகள் 29-Dec-2018 1:59 PM IST VRC கருத்துக்கள்

‘தூங்காவனம்’ படத்தை தொடர்ந்து ராஜேஷ் எம்.செலவா இயக்கி வரும் படம் ‘கடாரம் கொண்டான்’. கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மற்றும் ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் மாறுபட்ட ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இந்த படம் குறித்த ஒரு முக்கிய தகவல் புத்தாண்டன்று வெளியாக இருக்கிறது என்ற அறிவிப்பை படக்குழுவினர் சில நாட்களுக்கு முன் பதிவு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து ‘கடாரம் கொண்டான்’ படத்தின் செகண்ட் லுக் புத்தாண்டன்று வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் ரசிகர்களுக்கு புத்தாண்டு பிறப்பதற்கு முன்னதாகவே ‘கடாரம் கொண்டான்’ படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை வழங்கியுள்ளனர். அத்துடன், ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டீஸர் பொங்கல் ‘ட்ரீட்’டாக ஜனவரி 15-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு விக்ரம் ரசிகர்களுக்கு மற்றுமொரு இன்ப அதிர்ச்சியை வழங்கியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;