கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் டிரைலர் இன்று காலை வெளியானது. இந்த டிரைலர் ரசிகர்களிடியே பெரும் வரவேற்பு பெற்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘பேட்ட’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி உலகம் முழுக்க மிகப் பிரம்மாண்டமான முறையில் வெளியாக இருப்பதால், ரஜினி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்! இதற்கு காரணம், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் தங்களது அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் வெளியாவது அவர்களின் ரசிகர்களுக்கு அந்த பண்டிகை டபுள் மகிழ்ச்சியை தரும் பண்டிகையாக அமைந்துவிடும்.
அந்த வகையில் இந்த வருட பொங்கல் ரஜினி ரசிகர்களுக்கு டபுள் மகிழ்ச்சியை தரவிருக்கிறது. காரணம், ரஜினி நடித்த படம் பொங்கலுக்கு வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான கடைசி படம் ‘பாட்ஷா’தான்! ஆர்.எம்.வீரப்பனின் ‘சத்யா மூவீஸ்’ நிறுவனம் தயாரித்த இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினியுடன், நக்மா, ரகுவரன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் 1995-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ‘பாட்ஷா’ வெளியாகி 23 ஆண்டுகளான நிலையில் இப்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ வெளியாகிறது! இதனால் இந்த வருட பொங்கலை ரஜினி ரசிகர்கள் ‘ பட்டையை கிளப்பும் பொங்கலாக கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா...
ரஜினிகாந்தின் ‘2.0’ வருகிற 29-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி...
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் ரஜினியுடன் சிம்ரன், விஜய்சேதுபதி,...