பீட்டரின் பயணம் ஃபிப்ரவரியில்!

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘சர்வம் தாளமயம்’ ஃபிப்ரவரியில் வெளியாகிறது!

செய்திகள் 28-Dec-2018 12:07 PM IST Top 10 கருத்துக்கள்

’மின்சாரக்கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. இந்தில் ஜி.வி.பிரகாஷ் பீட்ட என்ற கேரக்டரில் கதையின் நாயகனாக நடிக்க, அபர்ணா முரளி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் நெடுமுடி வேணு, வினீத், திவ்ய தர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்த படம், பீட்டர் என்ற ஒரு இளைஞன் இசைத்துறையில் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்! அதற்காக அவர் ஒரு இசை மேதையிடம் சங்கீதம் கற்க செல்கிறார்! இதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படத்தை இந்த மாதம் (டிசம்பர்) ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு இறுதி ரிலீஸ் களத்தில் ஏராளமான திரைப்படங்கள் போட்டிப்போட, ‘சர்வம தாளமயம்’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இப்படம் வரும் ஃபிப்ரவரியில் வெளியாகும் என்ற அறிவிப்பை ஒரு ட்வீட்டின் மூலம் உறுதி செய்துள்ளார் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்! அவர் ‘சர்வம் தாளமயம்’ ரிலீஸ் குறித்து ட்வீட் செய்திருப்பதில், ‘‘பீட்டரின் உலகை உலுக்கும் கேள்வி ஒன்றைக் கேட்கிறாள் சாரா. அந்தக் கேள்விக்கான விடையை பீட்டர் தேடும் பயணம் – சர்வம் தாளமயம் – ஃபிப்ரவரி 2019 முதல்’’ என்று குறிப்பிட்டுள்ளார்! இதனால் இந்த படம் ஃபிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என்பது உறுதியாகியுள்ளது!

#GVPrakash #SarvamThaalaMayam#RajivMenon #ARRahman #Abarna

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;