நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா வரிசையில் நந்திதா!

நந்திதா கதையின் நாயகியாக நடிக்கும் ‘நர்மதா’

செய்திகள் 26-Dec-2018 3:43 PM IST Top 10 கருத்துக்கள்

‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘கலகலப்பு’, ‘உள்குத்து’ உட்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நந்திதா! நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா ஆகியோரைப் போல நந்திதாவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடித்து வருகிறார். ‘நர்மதா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானாது. ‘மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை கீதா ரஜ்புத் இயக்குகிறார். இந்த படத்திற்கு சதீஷ் சரண் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் இந்த படம் குறித்த மேலும் பல புதிய தகவல்களை விரைவில் அறிவிக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#Nayanthara #Trisha #Jyotika #Hansika #Nandita #Narmadha #MovieMakers #NanditaSwetha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராட்சசி - ட்ரைலர்


;