மீண்டும் ரிலீஸை தள்ளி வைத்த ஜி.வி.பிரகாஷ் படம்!

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘சர்வம் தாளமயம்’ படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைத்தது!

செய்திகள் 24-Dec-2018 1:27 PM IST VRC கருத்துக்கள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. ஜி.வி.பிரகாஷ் குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ஒரு இசை கலைஞனாக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஒரு இளைஞன் பற்றிய கதை ‘சர்வம் தாளமயம். இசைக்கும், பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை முதலில் படக்குழுவினர் இம்மாதம் 21-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அதே தேதியில் வேறு ஐந்தாறு படங்கல் ரிலீஸ் தேதி குறித்ததால் ‘சர்வம் தாளமயம்’ படத்தின் ரிலீஸை டிசம்பர் 28-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இது குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். ஆனால் இப்போது இம்மாதம் 28-ஆம் தேதியும் ‘சர்வம் தாளமயம்’ வெளியாகாது என்றும் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த விவரத்தை விரைவில் அறிவிக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார். இதனால் ஜி.வி.பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’ புத்தாண்டில் தான் வெளியாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0


;