‘வட சென்னை’ அன்புவை விட அதிக வேலை வாங்கிய கேரக்டர் ‘மாரி-2’

முதல்பாக ‘மாரி’ படத்தை விட இரண்டாம் பாக மாரியில் நடிப்பது சவாலாக இருந்தது! - தனுஷ்

செய்திகள் 19-Dec-2018 9:39 AM IST VRC கருத்துக்கள்

‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ சார்பில் தனுஷ் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள ‘மாரி-2’ வருகிற 21-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. இதனை முன்னிட்டு சற்றுமுன் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது தனுஷ் ‘மாரி-2’ குறித்து பேசும்போது, ‘‘மாரி-2’ பயங்கரமான மெசேஜ் உள்ள படம், வேர்ல்ட் கிளாஸ் மேக்கிங் படம், இந்த படத்தை பார்த்து நிறைய கத்துக்கணும், இந்த மாதிரி நிறைய படங்களை எடுக்கணும் என்று நினைக்கக் கூடிய படமல்ல. ‘மாரி-2’ முழுக்க முழுக்க மசாலா ஓரியண்டட் படம். ஃபேமிலியோட குழந்தைகளோட வந்து ஜாலியாக பார்த்து ரசிக்க கூடிய படம். அதில் என்ன சொல்ல முடியும் அதை கமர்ஷியலாக, ஜாலியான விஷயங்களை ரசிக்கும் படியாக சொல்லியிருக்கிறேன்.

‘மாரி’ முதல் பாகத்தில் மாரி கேரக்டரை சுற்றியே கதை நடக்கும். ஆனால் ‘மாரி-2’ படத்தில் மாரி கேரக்டரில் நிறைய எமோஷன்ஸ், செண்டிமென்ட், ரொமான்ஸ் போன்ற விஷயங்கள் இருக்கிறது. ‘வட சென்னை’ அன்பு கேரக்டரில் நடிக்கிறது எளிதாக இருந்தது. காரணம் அது ஒரு நேர்க்கோட்டை மட்டுமே நோக்கி பயணிக்கும் கதை! ஆனால் ‘மாரி’ கேரக்டர் அப்படிப்பட்ட கேரக்டர் கிடையாது. ஏன் என்றால மாரி நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை. அவனுக்கு யாரையும் பிடிக்காது. அதைப் போல அவனையும் யாருக்கும் பிடிக்காது. அப்படியிருக்கும்போது ஆடியன்ஸுக்கு எப்படி பிடிக்கும் என்ற கேள்வி வரும் இல்லையா” அந்த கேள்விக்கு பதில் கூறும் விதமாக ‘மாரி-2’ கேரக்டரை வித்தியாசமாக கையாண்டுள்ளார் இயக்குனர் பாலாஜி மோகன்.

நான் இதுவரை நடித்த எந்த படத்திற்குமே ‘மாரி-2’ கேரக்டருக்கு ஹோம் ஒர்க் பண்ணியது மாதிரி பண்ணியதில்லை. ‘மாரி-2’ கேரக்டர் பண்ணும்போது எந்த விஷயங்கள் சவாலாக இருந்தது என்றால், எவ்வளவு எமோஷனல் ஆனாலும் அழக்கூடாது! ஆனா எனக்கு ஜோடியாக வரும் சாய் பல்லவி எல்லாவற்றுக்கும் அழுதுகிட்டே இருப்பார். அப்படிப்பட்ட கேரக்டர் அவருக்கு. முதல் பாக ‘மாரி’ படத்தை பார்த்தவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ‘மாரி-2’ பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காரணம் இதில் நிறைய புதிய விஷயங்கள் இருக்கிறது’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கிரி - ட்ரைலர்


;