‘ஜானு’வாகும் பாவனா !

‘96’ படத்தின் கன்னட ரீ-மேக்கில் த்ரிஷா நடித்த ஜானு  கேரக்டரில் நடிக்கிறார் பாவனா!

செய்திகள் 13-Dec-2018 3:17 PM IST VRC கருத்துக்கள்

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா முக்கிய கேரக்டர்களில் நடித்து சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம் ‘96’. இந்த படத்தில் த்ரிஷா ஏற்று நடித்த ஜானு கேரக்டர் மிகவும் பேசப்பட்டது. இந்நிலையில் ‘96’ கன்னட மொழியில் ’99’ என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. ’ கன்னட ரீ-மேக்கை பிரீத்தம் குப்பி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி நடித்த கேரகரில் கணேஷ் நடிக்க, த்ரிஷா நடித்த ஜானு கேரக்டரில் பாவனா நடிக்கிறார். கணேஷ், பாவனா இருவரும் இதற்கு முன் ‘ரோமியோ’ என்ற கன்னட படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். ‘99’ படத்தில் நடிக்க இருப்பது குறித்த ஒரு கேள்விக்கு பாவனா பதில் அளிக்கும்போது, ‘‘பொதுவாக எனக்கு ரீ-மேக் படங்களில் நடிப்பதில் விருப்பம் இல்லை. ஆனால் ‘96’ படத்தின் கதை என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்க்கையில் நடக்கின்ற நிஜ சம்பவங்களோடு ஒத்துப்பொகிற மாதிரியான திரைக்கதை அமைப்பு என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதுமட்டும் இல்லாமல் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் பெங்களூருவிலேயே நடக்க இருப்பதும் எனக்கு வசதியாக அமைந்ததால் உடனே நடிக்க ஒப்புகொண்டேன்’’ என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;