‘சீதக்காதி’யில் விஜய்சேதுபதியுடன் 17 நாடக நடிகர்கள்!

பலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’யில் 17 நாடக கலைஞர்களும் நடித்துள்ளனர்!

செய்திகள் 13-Dec-2018 3:11 PM IST VRC கருத்துக்கள்

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’ திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. விஜய் சேதுபதியின் 25-ஆவது படமாக அமைந்துள்ள இந்த படத்தில் அர்ச்சனா, மௌலி, இயக்குனர் மகேந்திரன், பகவதி பெருமாள், ராஜ்குமார், கருணாகரன், சுனில், ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி சங்கர், டீகே உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இப்படத்தில் 17 நாடக நடிகர்- நடிகைகளும் நடித்துள்ளனர். இந்த படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் ‘சீதக்காதி’யில் நடித்துள்ள 17 நாடக நடிகர், நடிகைகளை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று காலை அறிமுகப்படுத்தி வைத்தார்கள் ‘சீதக்காதி’ படக்குழுவினர்.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய்சேதுபதி பேசும்போது, ‘‘இந்த படத்தில் இவர்களது பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேரக்டரில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். அதை நீங்கள் படத்தை பார்க்கும்போது உணர்வீர்கள். ‘சீதக்காதி’ எனது 25-வது படமாக அமைந்துள்ளதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இது தானா அமைந்த விஷயம்! 25-வது படம், அது எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நான் யோசித்ததோ, தீட்டமிட்டதோ கிடையாது. எல்லாம் தானாக அமைந்தது! ஆனா ’சீதக்காதி’ அதற்கேற்ற மாதிரி மறக்க முடியாத ஒரு படமாக அமைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் இந்த படத்தை இயக்கியிருக்கும் பாலாஜி தரணீதரன் மற்றும் இந்த கதையை தயாரிக்க முன்வந்த ‘ஃபேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம் ஆகியோர் ஆவார்கள்’’ என்றார்.

‘96’ படத்தின் மூலம் மிகவும் கவனம் பெற்ற கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ள ‘சீதக்கதி’யின் ஒளிப்பதிவை சரஸ்காந்த் கவனித்துள்ளார். கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனித்துள்ளார். ஆர்.கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;