ஹன்சிகாவின் 50-வது படம்!

ஹன்சிகாவின் 50-வது படம் ‘மகா’

செய்திகள் 11-Dec-2018 3:25 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் U.R.ஜமீல் இயக்க, சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார் ஹன்சிகா என்றும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்க இருக்கிறார் என்றும் தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். ஹன்சிகாவின் 50-வது படமாக அமைந்துள்ள இந்த படத்திற்கு ‘மகா’ என்று பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள். ஹன்சிகா கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தை இயக்கும் ஜமீல், ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவராவார். விக்ரம் பிரபுவுடன் ஹன்சிகா நடித்துள்ள ‘துப்பாக்கி முனை’ திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் ‘மகா’ பட போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளனர் இந்த படத்தை ‘எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்க இப்படத்தின் ஒளிப்பதிவை லக்‌ஷமன் கவனிக்கிறார்.

#Hansika #DirectorURJameel #Ghibran #Maha #MahaFirstLook

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;