யாராலும் யூகிக்க முடியாத கதை ‘உன் காதல் இருந்தால்’

ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி, மக்பூல் சல்மான், ரியாஸ்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உன் காதல் இருந்தால்’

செய்திகள் 11-Dec-2018 11:34 AM IST VRC கருத்துக்கள்

ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி, மக்பூல் சல்மான், ரியாஸ்கான், கஸ்தூரி, வையாபுரி, லெனா, காயத்ரி ஆகியோர் நடிக்கும் படம் ‘உன் காதல் இருந்தால்’. ‘மரிக்கார் ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் ஹாஷிம் மரிக்கார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு மன்சூர் அஹமத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் இயக்குனர் ஹாஷிம் மரிக்கார் படம் குறித்து பேசும்போது,

‘‘ஒரு படம் நன்றாக ஓடுவதற்கு நல்ல கதை முக்கியம். இப்படத்தில் அது இருக்கும். இப்படத்தின் டைட்டில் காதல் சம்பந்தப்பட்டு இருக்கும். ஆனால் படம் உட்சபட்ச த்ரில்லர் படமாக இருக்கும். இந்த படத்தில் ஒரே கதாநாயகன்தான். அவர் ரியாஸ்கான். மற்ற அனைவருமே வில்லன்கள்தான். இப்படத்தின் கதை யாராலும் யூகிக்க முடியாதபடி இருக்கும். படம் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். நான் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், பிருத்திவிராஜ் உட்பட பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்திருக்கிறேன். இந்த படத்தின் மூலம் தமிழில், இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறேன். நீங்கள் கேட்கலாம், ஏன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கிறீர்கள்? என்று! நான் தமிழ் படங்களை மிகவும் நேசிக்கிறேன். இந்த பத்தை ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளேன். இப்படத்தை தொடர்ந்து நான் இயக்கும் படத்திற்கு வித்தியாசமாக ‘கனவில் கண்ட காதல் கவிதை’ என்று பெயர் வைத்துள்ளேன். ‘உன் காதல் இருந்தால்’ படம் வெளியானதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கும்’’ என்றார்.

நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, ‘‘இந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஹாஷிம் மரிக்கார் மிகப் பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் என்னிடம் கதை கூறியதுமே நீங்கள் என்ன கூறினீர்களோ அது படத்தில் அப்படியே வந்தால் நன்றாக இருக்கும் என்றேன். அப்படியே செய்தும் இருக்கிறார். இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாகிறது’’ என்றார்.

இந்த படத்தில் நடித்திருக்கும் மக்பூல் சல்மான் நடிகர் மம்முட்டியின் தம்பி மகன் ஆவார். மலையாளத்தில் 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மக்பூல் சல்மான் பேசும்போது, ‘‘என் பெரியப்பா மம்முட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் ஆகியோர் தமிழ் படங்களில் நடித்துள்ளார்கள். அவர்களை போல எனக்கும் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அது இந்த படம் மூலம் நிறைவேறியுள்ளது. என பெரியப்பா மம்முட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் ஆகியோருக்கு நீங்கள் தந்த வரவேற்பு மாதிரி எனக்கும் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் பின்னணி இசையை ஸ்ரீகாந்த் தேவா அமைத்துள்ளார். சஜித் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் சுரேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

#UnKadhalIrundhal #Srikanth #ChandrikaRavi #MaqbulSalmaan #ManssorAliKhan #RiyasKhan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இளமி - டிரைலர்


;