வெப் சீரீஸ் தயாரிப்பிலும் களம் இறங்கிய ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில் பாபி சிம்ஹா, பார்வதி நாயர் நடித்துள்ள வெப் சீரீஸ் ‘வெள்ள ராஜா’.

செய்திகள் 4-Dec-2018 3:26 PM IST VRC கருத்துக்கள்

‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை தயாரித்த ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் இப்போது வெப் சீரிஸ் தயாரிப்பிலும் களம் இறங்கியுள்ளது. சமீபகாலமாக அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார், வியு போன்ற வெப் தளங்கள் மூலம் சினிமா, சீரிஸ் போன்ற கலை படைப்புகளை கண்டு களிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது! இதனை கருத்தில்கொண்டு அமேசான் நிறுவனமும், எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோரின் ‘ட்ரீட்ம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள வெப் சீரீஸ் ‘வெள்ள ராஜா’.

இந்த சீரிஸில் பாபி சிம்ஹா, பார்வதி நாயர், காளிவெங்கட், காயத்ரி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த சீரீஸை ‘சவாரி’ என்ற திரைப்படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். ‘வெள்ள ராஜா’ சீரீஸ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அமேசானில் வருகிற 7-ஆம் தேதி வெளியாகிறது.

வட சென்னையின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான லாட்ஜ் பாவா லாட்ஜ். இந்த லாட்ஜில் பணையக் கைதிகளாக இருக்கும் சில நபர்கள், போதை பொருட்கள் கடத்தும் கும்பல் தலைவன், இவர்களை தேடும் போலீஸ்கார்கள்… இவர்களுக்குள் நடக்கும் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் கதைதான் ‘வெள்ள ராஜா’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;