ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன் இணையும் படம்!

‘ஜித்தன்’ ரமேஷ் தயாரிப்பில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன் இணைந்து நடிக்கும் படம்!

செய்திகள் 4-Dec-2018 3:15 PM IST VRC கருத்துக்கள்

விமல், அஞ்சலி நடித்த ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கியவர் ராஜசேகர். இவர் இயக்கத்தில் ‘ஜித்தன்’ ரமேஷ் ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ஜீவாவும், அருள்நிதியும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். நட்பை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம் இது. இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்க இருக்கிரார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

ஜீவா இப்போது ‘ஜிப்சி’, ‘கீ’, ‘கொரில்லா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அருள்நிதி, ‘ புகழேந்தி என்னும் நான்’ படத்தில் நடித்து வருகிரார். மஞ்சிமா மோகன் ‘தேவராட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் மூவரும் இணைந்து நடிக்க, இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 13-ஆம் தேதி துவங்க இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;