ஐஸ்வர்யா தத்தாவை தொடர்ந்து யாஷிகா ஆனந்துடன் கை கோர்க்கும் மஹத்!

அறிமுக இயக்குனர்கள் மகேஷ், வெங்கடேஷ் இயக்கத்தில் மஹத், யாஷிகா ஆனந்த் நடிக்கும் படம்!

செய்திகள் 4-Dec-2018 3:11 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் பிரபுராம்.சி. இயக்கத்தில் ‘பிகபாஸ்’ பிரபலங்கள் மஹத், ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ஒரு படம் உருவாகிறது. இந்த படம் தவிர மஹத் மற்றுமொரு படத்தில் நடிக்கிறார்! இந்த படத்தை அறிமுக இயக்குனர்கள் மகேஷ், வெங்கட் இருவரும் இணைந்து ‘மேக்வென்’ என்ற பெயரில் இயக்குகின்றனர். இவர்களில் மகேஷ் மறைந்த தினபூமி பத்திரிகை நிருபவர் கமல் மகனாவார். வெங்கட் தமிழ் முரசு பத்திரிகை நிருபர் ஜெயச்சந்திரனின் மகனாவார். இரண்டு பத்திரிகையாளர்களின் மகன்கள் இணைந்து இயக்கும் இப்படம் ஹாரர், த்ரில்லர் படமாக உருவாகிறது.

இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் மஹத்துடன் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். ஐஸ்வர்யா தத்தாவை போல இவரும் மஹத்துடன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களால் ரொம்பவும் பேசப்பட்டவராவார்! இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;