‘தளபதி 63’ல் இணைந்த நயன்தாரா!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ல் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்!

செய்திகள் 26-Nov-2018 1:04 PM IST Top 10 கருத்துக்கள்

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகவிருக்கிறது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரின் 63வது படம். தற்காலிகமாக ‘தளபதி 63’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார். விவேக், யோகி பாபு காமெடியனாக சேர்க்கப்பட்டுள்ள இப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2009ல் வெளிவந்த ‘வில்லு’ படத்திற்குப்பிறகு 9 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐரா, விஸ்வாசம், கொலையுதிர் காலம், எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் உட்பட தற்போது அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஐரா டீஸர்


;