கஜா புயல் - கை கோர்த்த திரையுலக பிரபலங்கள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் உதவி!

செய்திகள் 21-Nov-2018 12:41 PM IST VRC கருத்துக்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு நடிகர் சிவகுமார் தனது குடும்பத்தினர் சார்பில் 50 லட்சம் ரூபாய வழங்கினார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் மதிப்பிலான நிவாரன பொருடகள், நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் இரண்டு லாரி நிவாரண பொருட்கள், நடிகர் விஜய் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 4.5 லட்சம், நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் என்று உதவிகள் செய்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ கஜா புயலால பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளது! இப்படி பல்வேறு பிரபலங்கல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வரும் நிலையில் மேலும் பல திரையுலக பிரபலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இன்று நடிகர் விக்ரம் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தினர் மூலம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். கவிஞர் வைரமுத்து, முதல் அமைச்சரின் நிவாரன நிதிக்காக 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான அடுத்த மாதம் (டிசம்பர்) 24-ஆம் தேதி கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்துக்கு வழங்குவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். இப்படி பல பிரபலங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில் இன்னும் நிறைய பேர் உதவிகளை செய்ய முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா டீஸர்


;