பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ’சீதக்காதி’ அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், அர்ச்சனா, மௌலி, பகவதி பெருமாள் உட்பட பலர் நடிக்கின்றனர். மாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் விஜய்சேதுபதி இப்படத்தில் ஏற்று நடித்திருக்கும் கேரக்டரும் முற்றிலும் மாறுபட்டதாகும்! சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘96’, ‘செக்கச் சிவந்த வானம்’ ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில் ‘சீதக்கதி’யின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. இந்நிலையில் இப்படத்தை மேலும் ரசிகர்களிடத்தில் புரொமோட் செய்யும் விதமாக இப்படத்தின் ட்ரைலரை நாளை மறுநாள் (21-11-19) காலை 11 மணிக்கு வெளியிட இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான் ‘96’ படத்தின் இசையும் பாடல்களும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ‘96’ படத்திற்கு இசை அமைத்த கோவிந்த வசந்தாவே ‘சீதக்காதி’ படத்திற்கும் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன் இப்போது வெப் சீரீஸ் தயாரிப்பிலும் இறங்கியுள்ளர்....
இப்போது சினிமாவுக்கு நிகராக வெப் சீரீஸுகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் சில...
‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு இயக்குனர் சீனுராமசாமியும், விஜய்சேதுபதியும் இணைந்துள்ள படம் ‘மாமனிதன்’....