சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்சம் உதவி!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்சம் ரூபாய்  நிதி அளித்தனர்!

செய்திகள் 19-Nov-2018 12:54 PM IST VRC கருத்துக்கள்

தமிழகத்தில் சமீபத்தில் வீசிய கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், தஞ்சை உட்பட பல மாவட்டங்கள் பெரும் சேதத்துக்கு உள்ளாகி அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் பேர் மரணமும் அடைந்துள்ள நிலையில் வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிறைய பேர் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக நடிகர் சிவக்குமார், தனது குடும்பத்தினர் சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

ஏற்கெனவே பல்வேறு இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் செய்துள்ளனர். சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழையால் பெரும் வெள்ளம் மற்றும் பேரழிவுகள் ஏற்பட்டு அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட, அவர்களுகு உதவும் விதமாக நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து கேரள முதல்வரின் பொதுநல நிவாரண நிதிக்காக 25 லட்சம் ரூபாய் வழங்கினர். இந்த உதவியை தொடர்ந்து இப்போது தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;