விவேக் இயக்கத்தில் ‘பாக்ஸர்’ ஆகும் அருண் விஜய்!

விவேக் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் ‘பாக்ஸர்’

செய்திகள் 19-Nov-2018 12:33 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் தியாகு என்ற கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றவர் அருண் விஜய்! இவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘தடம்’. மகிழ் திருமேனி இயக்கும் ‘தடம்’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் நிலையில், அருண் விஜய் அடுத்து நடிக்க இருக்கும் படம் ‘பாக்ஸர்’. இந்தப் படத்தை விவேக் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் இசை அமைப்பாளராக லியோன் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளராக மார்கஸ், படத்தொகுப்பாளராக மதன் ஆகியோர் பணியாற்ற இருக்கிறார்கள் என்றும் இந்த படம் தனது 27-வது படம் என்றும் அருண் விஜய் ட்வீட் செய்துள்ளார். இந்த படத்தை ‘ETCETERA ENTERTAINEMENT’ நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். ‘பாக்ஸர்’ படத்தை இயக்கும் விவேக் ஏற்கெனவே த்ரிஷா நடிப்பில் ‘குற்றப் பயிற்சி’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிலுக்குவார்பட்டி சிங்கம் டைலர்


;