சசிக்குமார் பட ஷூட்டிங்கை துவக்கி வைத்த சமுத்திரக்கனி!

எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக சசிகுமார் நடிக்கும் படம் ‘கொம்பு வச்ச சிங்கமடா’

செய்திகள் 13-Nov-2018 11:27 AM IST VRC கருத்துக்கள்

‘சுந்தரபாண்டியன்’ படத்தில் இணைந்த சசிகுமாரும், இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறாரக்ள் என்றும் இந்த படத்திற்கு ‘கொம்பு வச்ச சிங்கமடா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும் இந்த படத்தில் மடோனா செபாஸ்டியன் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் தகவலை சில நாட்களுக்கு முன் நமது இணையதளத்தில் பதிவு செய்திருந்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று காரைக்குடியில் துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பை இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி கிளாப் அடித்து துவக்கி வைத்தார். இதனை தொடார்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு ஒரேகட்டமாக பொள்ளாச்சி, தென்காசி, பழனி, கோவில்பட்டி விருந்து நகர், தென்காசி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் நடைபெறவிருக்கிறது.

சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் இந்த படம்

1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படமாம். இப்படத்தில் சசிக்குமார், மடோனா செபாஸ்டியனுடன் முக்கிய கதாபாத்திரங்களில் கலையரசன், சூரி, யோகி பாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் பிஷாரடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீபிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.இந்த படத்தை ‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய படங்களை தயாரித்த இந்தர்குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவை

ஏகாம்பரம் கவனிக்க, திபு நினன் தாமஸ் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை டான் பாஸ்கோ கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;