சமீபத்தில் வெளியான ‘சாமி-2’ படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் ‘துருவநட்சத்திரம்’ மற்றும் ‘கடாரம் கொண்டான்’. இதில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘துருவநட்சத்திரம்’ படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் ‘துருவநட்சத்திரம்’ படம் குறித்து ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இப்படத்திற்கு இசை அமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ்! அதில், துருவநட்சத்திரம் படத்தில் இடம் பெறும் ‘ஒரு மனம்…’ என்று துவங்கும் சிங்கிள் டிராக் இந்த மாதம் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தில் விக்ரமுடன், ரிதுவர்மா, ஐஸ்வர்யா, சிம்ரன், பார்த்திபன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் லக்ஷமண் தயாரித்துள்ள படம் ‘தேவ்’ கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங்...
அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல்ப்ரீத் சிங் நடித்திருக்கும் படம் ‘தேவ்’....
மிகப் பெரிய வெற்றி அடைந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படம் ‘தேவ்’....