சுந்தர்.சி.இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும் நவம்பர் 6-ஆம் தேதி, தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இந்த படத்திற்கு ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்பு பேசும் வசனத்தையே இப்படத்திற்கு தலைப்பாக சூட்டியிருக்கிறார்கள். இந்த படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘Attarintiki Daredi’ படத்தின் ரிமேக் இது என்பதும், இந்த படத்தில் சிம்புவுடன் கேத்ரின் தெரெசா, மேகா ஆகாஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என்பதும் ஏற்கெனவே வெளியான தகவல்களாகும்!
#VanthaRajavathaanVaruven #STR #Simbu #Silambarasan #MeghaAkash #CatherineTresa #CCV #ChekkaChivanthaVaanam #AttarintikiDaresi
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...