சிபி சத்யராஜுடன் இணயும் தான்யா!

சிபி சத்யராஜ் நடிக்கும் ‘மாயோன்’ படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார்!

செய்திகள் 29-Oct-2018 6:51 PM IST Top 10 கருத்துக்கள்

சிபி சத்யராஜ் நடிக்கும் ‘ரங்கா’ படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து சிபி நடிக்கும் மற்றொரு படம் ‘மாயோன்’. இந்த படத்தை கிஷோர் இயக்க, இளையராஜா இசை அமைக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படப்புகழ் சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ராம்பாண்டியன் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடந்து வந்தது. அதில் தான்யா ரவிச்சந்திரன் தேர்வாகியுள்ளார். சசிகுமாருடன் ‘பலே வெள்ளையத்தேவா’, அருள் நிதியுடன் ‘பிருந்தாவனம்’, விஜய் சேதுபதியுடன் ‘கருப்பன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள தான்யா ரவிச்சந்திரன் தனது நான்காவது படத்தின் மூலம் சிபி சத்யராஜுடன் இணைந்து நடிக்கிறார்! தன்யா ரவிச்சந்திரன் மறைந்த பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது பெரும்பாலானோருக்கும் தெரிந்த விஷயமாகும்!


#Karuppan #Maayon #SathyanSooryan #Sethupathi #SibiSathyaraj #ArulNidhi#SasiKumar #Tanya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;