‘வட சென்னை’ - முதலிரவு காட்சிகள் நீக்கம்!

‘வட சென்னை’ படத்திலிருந்து முதல் இரவு காட்சிகள் நீக்கம்!

செய்திகள் 23-Oct-2018 4:05 PM IST VRC கருத்துக்கள்

சென்ற வாரம் 17-ஆம் தேதி வெளியான படம் ‘வட சென்னை’. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிப் படமாக அமைந்துள்ளதோடு சில சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது.

இந்த படத்தில் இடம் பெறும் அமீர், ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட முதலிரவு காட்சி உட்பட சில காட்சிகள் மீனவ சமுதாயத்தை இழிவுப்படுத்துவது மாதிரி அமைந்துள்ளது என்பதை சில மீனவ நண்பர்கள் இயக்குனர் வெற்றிமாறனிடம் முறையிட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு வெற்றிமாறன் அந்த முதலிரவு காட்சி உட்பட சில காட்சிகளை ‘வட சென்னை’ படத்திலிருந்து நீக்க முடிவு செய்துள்ளார். தனுஷின் ‘வுண்டர் பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்த இப்படம் ‘A’ சர்டிஃபிக்கெட்டுடன் தான் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கிரி - ட்ரைலர்


;