சிம்புதேவன் படத்தில் விஜயலட்சுமி!

வெங்கட் பிரபு தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் நடிக்கும் விஜயலட்சுமி!

செய்திகள் 15-Oct-2018 12:36 PM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை-600028’, ’சரோஜா’, ‘பிரியாணி’, ‘சென்னை -600028’ இரண்டாம் பாகம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் விஜயலட்சுமி. சமீபத்தில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட விஜயலட்சுமி, அடுத்து சிம்பு தேவன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறர். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவின் ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிப்பது குறித்த தகவலை விஜயலட்சுமி தனது ட்விட்டர் பக்கம் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார். விஜய் நடிப்பில் ‘புலி’ படத்தை இயக்கிய சிம்பு தேவன் அடுத்து இயக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபுவின் ‘பிளாக் டிக்கெட் கம்பைனி’ தயாரிப்பில் உருவாகி வரும் மற்றொரு படம் ஆர்.கே.நகர். இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ச்ச ச்ச சாரே பாடல் - பார்ட்டி


;