‘விஸ்வாசம்’ அப்டேட்!

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் டப்பிங் வேலைகள் துவங்கி விட்டது!

செய்திகள் 9-Oct-2018 11:09 AM IST Top 10 கருத்துக்கள்

‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் அஜித் நடிக்கும் இரண்டாவது படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசியும் முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு புனே, மும்பை ஆகிய இடங்களில் விரைவில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தின் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் வேலைகள் துவங்கிவிட்டது என்றும், இப்போது அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் வேலைகள் நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, விவேக், ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைக்கிறார்.ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஐரா ட்ரைலர்


;