‘பேட்ட’யில் இணைந்த ரஜினியின் ஃபேவரிட் இயக்குனர்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’யில் இயக்குனர் மகேந்திரனும் நடிக்கிறார்!

செய்திகள் 8-Oct-2018 5:51 PM IST Top 10 கருத்துக்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், மேகா ஆகாஷ் என ஏகபட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் படம் ‘பேட்ட’. ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இபோது வாரணாசியில் நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்து பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இப்படத்தில் இயக்குனர் சசிகுமாரும் நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு பிரபல இயக்குனரும் நடிகராக இணைந்துள்ளார்! அவர் இயக்குனர் மகேந்திரன்! விஜய்யின் ‘தெறி’ படத்தில் வில்லனாக நடித்த இயக்குனர் மகேந்திரன் சமீபத்தில் வெளியான ‘நிமிர்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். ‘பேட்ட’ படத்தில் இயக்குனர் மகேந்திரன் நடிப்பது குறித்து படக்குழுவினரிடமிருந்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றாலும், இயக்குனர் மகேந்திரன் அதை தனது ட்விட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். ரஜினி நடிப்பில் ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’, ‘கை கொடுக்கும் கை’ முதலான படங்களை இயக்கியுள்ள மகேந்திரன் ரஜினியின் ஃபேவரிட் இயக்குனர்களில் ஒருவராவார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேட்ட ட்ரைலர்


;