ஏ.ஆர்.முருகதாஸை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்!

‘பேட்ட’ புகைப்படங்கள், வீடியோ – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள்!

செய்திகள் 8-Oct-2018 12:18 PM IST Top 10 கருத்துக்கள்

சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தான் இயக்கி வரும் ‘சர்கார்’ படம் குறித்த தகவல்களை படக்குழுவினரில் சிலர் வெளியில் பகிர்ந்து வருவதை அறிந்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதில் ‘படம் குறித்த தகவல்களை முறையாக அனுமதி பெறாமல் வெளியில் பகிர்ந்துகொண்டால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார்,. இப்போது அது மாதிரி ரஜினிகாந்த நடிப்பில் ‘பேட்ட’ படத்தை இயக்கி வரும் கார்த்திக் சுப்புராஜும் ஒரு ட்வீட் மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், ‘‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன! தயவு செய்து இதனை யாரும் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டாம்! அனைவரது ஒத்துழைப்பும் தேவை’’ என்று குறிப்பிட்டிருபதோடு, ஒரு பிரபல டிவி சேனலில் ‘பேட்ட’ படத்தின் இது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியானது குறித்தும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது வருத்தத்தையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். ‘சர்கார்’ மற்றும் ‘பேட்ட’ ஆகிய இரண்டு படக்களும் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவன தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு சட்டை ஒரு பல்பம்


;