‘விஸ்வாச’த்தை கைபற்றிய நயன்தாரா பட தயாரிப்பாளர்!

‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக விநியோக உரிமையை கைபற்றிய ‘அறம்’ பட தயாரிப்பாளர்!

செய்திகள் 5-Oct-2018 3:16 PM IST VRC கருத்துக்கள்

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் இரண்டாவது முறையாக நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, கோவை சரளா, கலைராணி, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உட்பட பலர் நடிக்கின்றனர். கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. ஹைதராபாத் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியுள்ள ‘விஸ்வாசம்’ படக்குழுவினர் விரைவில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகாக மும்பை செல்லவிருக்கின்றன்ர். ‘விஸ்வாசம்’ பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் இப்படத்தின் வியாபார விஷயங்களும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ‘விஸ்வாசம்’ படம பற்றிய புதிய தகவலாக இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை கோட்டபடி ராஜேஷ் கைபற்றியுள்ளார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். நயன்தாராவின் மானேஜரும், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ மற்றும் பிரபு தேவா, ஹன்சிகா நடிப்பில் வெளியான ‘குலேபகாவலி’ முதலான படங்களை தயாரித்தவருமானவர் கோட்டபடி ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

‘விஸ்வாசம்’ படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் நிலையில் அவரது மானேஜரான ‘கோட்டபடி’ ராஜேஷ் ‘விஸ்வாசம்’ படத்தை கைபற்றியிருப்பதன் மூலம் இப்படம் மீதான ஏதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது,.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஐரா ட்ரைலர்


;