ஆரவை தொடர்ந்து ரித்விகா!

ஆரவை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் இடத்தை பிடித்தார் நடிகை ரித்விகா!

செய்திகள் 1-Oct-2018 11:34 AM IST VRC கருத்துக்கள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களின் அதிக கவனம் பெற்ற சமீபத்திய நிகழ்ச்சி எது என்றால் அது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தான்! விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து சமீபத்தில் ‘பிக் பாஸ்’ சீஸன்-2 நிகழ்ச்சி ஆரம்பமானது. இதில் நடிகைகள் ரித்விகா, மும்தாஜ், ஜனனி ஐயர், யாஷிகா ஆனந்த், விஜயலட்சுமி, நடிகர்கள் பாலாஜி, மஹத், சென்ட்ராயன், பொன்னம்பலம், டேனியல் உட்பட பலர் பங்கேற்றனர். முதல் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தான் ‘பிக்பாஸ் நிகழ்ச்சி’ சீஸன்-2’வையும் தொகுத்து வழங்கினார். 100 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகை ரித்விகா வின்னராக அறிவிக்கப்பட்டார். மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, கபாலி, இருமுகன் உட்பட பல படங்களில் நடித்துள்ள ரித்விகா ‘பிக் பாஸ்’ சீஸன்-2 நிகழ்ச்சியில் வென்று முதல் இடத்தை பிடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்று விட்டார். முதல் சீஸன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ் முதல் இடத்தை பிடித்திருந்தார். ஆரவை தொடர்ந்து இப்போது ரித்விகா வெற்றிப் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து ரித்விகாவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன!

#NGK #Suriya #Selvaraghavan #YuvanShankarRaja #SRPRabhu #RakulPreet #SaiPallavi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உறியடி 2 - டீஸர்


;