சூர்யாவின் ‘NGK’ குறித்த முக்கிய அறிவிப்பு!

சூர்யாவின் ‘NGK’  படம் பற்றி  இம்மாதம் அடுத்தடுத்து பல அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது!

செய்திகள் 1-Oct-2018 10:43 AM IST VRC கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘NGK’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.அர்.பிரபு இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதலில் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவிரக்க முடியாத சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு, ‘செப்டம்பர் மாதம் முடிந்து விட்டது. இம்மாதம் (அக்டோபர்) ‘NGK’ குறித்து அடுத்தடுத்து பல அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது’’ என்று ட்வீட் செய்துள்ளார். இதனால் ரசிகர்களுக்கு ‘NGK’ படம் சம்பந்தமான பல புதிய தகவல்கள் கிடைக்க இருக்கிறது. சூர்யாவும், செல்வராகவனும் முதன் முதலாக இணைந்துள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி கதாநாயகிகளாக நடிக்க, இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்கிறார். ‘NGK’ பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் படமாகும்!

#NGK #Suriya #Selvaraghavan #YuvanShankarRaja #SRPRabhu #RakulPreet #SaiPallavi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காப்பான் - டீஸர்


;