தனுஷை இயக்கும் ‘முண்டாசுப்பட்டி’ இயக்குனர்!

முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ராம்குமார்!

செய்திகள் 26-Sep-2018 11:32 AM IST VRC கருத்துக்கள்

தனுஷ் நடிப்பில் ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தை தயாரித்த ‘கலைப்புலி’ எஸ்.தாணு தனுஷ் நடிப்பில் மற்றுமொரு படத்தை தயாரிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படம் குறித்த மேலும் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. தனுஷ் நடிக்கும் இந்த படத்தை ‘முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்க இருக்கிறது என்றும் தகவல் கிடைத்துள்ளது. ‘முண்டாசுப்பட்டி’ படத்தை தொடர்ந்து ராம்குமார் இயக்கியுள்ள படம் ‘ராட்சசன்’. விஷ்ணுவிஷால், அமலா பால் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படம் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனது மூன்றாவது படமாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ராம்குமார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

#Dhanush #Ramkumar #Ratsasan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்


;