ஆரவ் படத்தில் விஜய் ஆன்டனி பட ஹீரோயின்!

ஆரவ் கதாநாயகனாக நடிக்கும் ‘பீமராஜா’ படத்தில் விஜய் ஆண்டனியின்     ‘கொலைகாரன்’ பட  ஹீரோயின்!

செய்திகள் 24-Sep-2018 2:35 PM IST VRC கருத்துக்கள்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்த ஆரவ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ராஜபீமா’. ‘சுரபி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கி வருகிறார். யானையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் ஆரவுக்கு ஜோடியாக ஆஷிமா நெர்வால் நடிக்கிறார். விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘கொலைகாரன்’ படத்தில் நடித்து வரும் ஆஷிமா நெர்வாலுக்கு அப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவதற்குள் ‘பீமராஜா’ படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் வாழ்ந்து வரும் ஆஷிமா நெர்வாலின் பூர்வீகம் ஹரியானாவாம். பல அழகி போட்டிகளில் கலந்துகொண்டு கவனம் பெற்றுள்ள ஆஷிமா நெர்வால் ‘பீமராஜா’வில் ஆரவின் காதலியாகவும். வன விலங்குகள் ஆர்வலராகவும் நடிக்கிறார். இந்த படத்தில் யானையும் ஒரு முக்கிய கேரக்டராக வருவதால் அதனுடன் நடிக்க ஆஷிமா இப்போது பயிற்சி எடுத்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;